திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூரில் அமைந்துள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில், மறைந்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் படத்திற்கு திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களிடம் வாக்கு கேட்டு வந்தபோதே தெரிவித்துவிட்டேன், மூன்றாண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தத் திட்டம் வகுத்துள்ளேன். உலக வங்கி மூலம் ரூ.1,500 கோடியில் தண்ணீர் பிரச்னைக்கு மூன்றாண்டுகளுக்குள் நிரந்தர தீர்வு காண்பேன்.
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வாக்குறுதி அளித்துள்ளேன். உரிய துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன். தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் சட்டத்திருத்தம் கொண்டவருவது ஆபத்தானது.
ஜெயக்குமார் எம்பி செய்தியாளர் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினரான என்னையே பயங்கரவாதி என கைது செய்வார்கள். நாட்டில் பன்முகத் தன்மையை மாற்றிட ஒரே கொள்கையை கொண்டுவர பாஜக முயல்கிறது. அதனால் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவந்தால்தான் அது நிகழும் என நினைக்கிறது.
இதனைத் தட்டிக் கேட்கும் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கக் கூடாது என பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. ரயிலில் குண்டு வைத்தவர்கள், கொலை செய்தவர்கள்தான் தற்போது எம்பி பதவியில் உள்ளனர்” எனக் கூறினார்.