தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ஓவியப்போட்டி - 100% vote vote awarness

திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவர்களிடையே ஓவியப்போட்டி நடைபெற்றது.

100% வாக்குப்பதிவை மாணவர்கள் நடத்திய ஓவியப்போட்டி

By

Published : Apr 9, 2019, 10:13 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவர்களின் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு அங்கமாக நூறு சதவிகித வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகளுக்குஓவிய போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் பார்வையிட்டு மாணவர்களின் திறமைகளை பாராட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியின்போது நகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர் ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ஓவியப்போட்டி

ABOUT THE AUTHOR

...view details