திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ விஜயகுமாருக்கு கரோனா! - mla vijayakumar corona
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ். விஜயகுமாருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
admk mla
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் (மியாட்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகுமாருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால் அவரது மனைவி, இரண்டு மகள்களுக்கும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:விஜயகாந்த் பூரண நலம்பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பிரார்த்தனை!