தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

45 வருடங்கள்... அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்!

திருத்தணி அடுத்த டி புதூர் கிராமத்தில் மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் 45 ஆண்டுகளாக இருளர் இன மக்கள் அவதிப்படுகின்றனர்.

அடிப்படை வசதி கூட இல்லாமல் தவிக்கும் மக்கள்
அடிப்படை வசதி கூட இல்லாமல் தவிக்கும் மக்கள்

By

Published : Jul 14, 2021, 11:16 AM IST

Updated : Jul 14, 2021, 2:32 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட டி புதூர் இருளர் காலனி மக்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக நந்தி ஆற்றங்கரை ஓரமாக குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர்.

சிம்னி விளக்கு வெளிச்சத்தில் கல்வி

மின்சார வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் பாம்பு , தேள் போன்றவை குடிசை வீட்டிற்குள் புகுந்துவிடும் நிலையில் தாங்கள் வசிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்

மாற்று இடம்

மழை, சூறைக்காற்று, பெரும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மிகவும் அவதிப்படும் அவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது புதிதாக பொறுப்பேற்ற வருவாய் கோட்டாட்சியர் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடம் வழங்க ஒப்புதல் அளித்தார்.

பட்டா வழங்கியும் பயனில்லை

இவர்கள் வடித்த கண்ணீரின் பயனாக 20 பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கு திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் ஊராட்சியில் மாற்று இடத்திற்கான இலவச வீட்டுமனைப் பட்டாவை வருவாய் கோட்டாட்சியர் சத்யா வழங்கினார். பல வருட போராட்டத்திற்கு பின் பட்டா வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். இருப்பினும் அரசு பட்டா வழங்கினாலும் மாற்று இடத்தில் வீடு அமைத்துக் கொள்ளும் வசதி இல்லை. அரசு எங்களின் நிலை அறிந்து தொகுப்பு வீடு கட்டி வாழ்வாதாரத்தை காக்க உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மரம் செய விரும்பு' - ஊரடங்கு காலத்திலும் ஊருக்காக வாழும் நண்பர்கள்

Last Updated : Jul 14, 2021, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details