திருவள்ளூர் அடுத்த அயத்தூர் அருகே உள்ள வேப்பம்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. அவர் ரயிலில் பயணம்செய்து இளங்கலை படித்துள்ளார். அப்பொழுது வேப்பம்பட்டு ரயில் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துவந்தனர்.
இந்நிலையில் க2019ஆம் ஆண்டு சித்ராவை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து குளிர்பானத்தில் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, விக்னேஷ்வரன் பெண்ணின் கருவை கலைத்துள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்ததாகக் கேள்விப்பட்டு விசாரித்த சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டியும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சித்ரா அவரது உறவினர்களுடன் திருமண ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு மாத்திரை கலந்துகொடுத்து கருக்கலைப்பு செய்து நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ்வரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க:கரோனா 2ஆவது அலைக்குத் தயாராகும் சென்னை!