திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையின் கழுத்தில் தூக்கு வைத்துக் கொள்வது போன்று கயிறை மாட்டி அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் அம்பேத்கர் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை: பொதுமக்கள் சாலை மறியல்! - Thiruvallur District News
திருவள்ளூர்: பெரியபாளையம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள்
தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!