தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வெளிமாநிலங்களில் உரம் வாங்க அரசு நடவடிக்கை’ - அமைச்சர் செல்லூர் ராஜு

திருவள்ளூர்: வெளி மாநிலங்களிலிருந்து உரம் வாங்கி விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

The government is taking steps to buy fertilizer in the other statesz

By

Published : Nov 14, 2019, 9:57 PM IST

திருவள்ளூரில் 66ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

தேசிய வங்கிகளை இணைத்ததுபோல் கூட்டுறவு வங்கிகளை இணைக்கக்கூடாது. ஸ்பிக் போன்ற உரத் தொழிற்சாலைகள் இயங்காததால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வெளி மாநிலங்களிலிருந்து யூரியா வாங்கி விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ரஜினியின் கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை’ - கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details