தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”திருவள்ளூரில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார்”- ஆட்சியர்

திருவள்ளூர்: வாட்டர் மிஷன் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2 ஏரிகளில் தூர்வாரும் பணிகளை வருகிற 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி கூறினார்.

The Chief Minister will examine civic engagement in Tiruvallur

By

Published : Aug 4, 2019, 6:17 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கூரம் பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக வளர்ச்சி துறையினர் மூலம் வாட்டர் மிஷன் திட்டத்தில் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பனபாக்கம் 43 பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் எனவும்,

மாவட்ட ஆட்சியர் பேட்டி


பணிகளை வருகிற 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details