தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயிற்று வலி காரணமாக இளம்பெண் தற்கொலை முயற்சி - காவல்துறை விசாரணை! - காவல்துறை விசாரணை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தீராத வயிற்று வலி காரணாக இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்ததையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

teen-attempts-suicide-due-to-abdominal-pain-police-investigation
teen-attempts-suicide-due-to-abdominal-pain-police-investigation

By

Published : Sep 17, 2020, 8:19 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதியர் வேலு (31) - மாரி (28). இவர்களுக்கு கட்ந்த பத்தாண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மாரி கடந்த சில தினங்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள், பலத்த தீக்காயங்களுடன் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கொலை வழக்கில் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details