தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேண்டுமென்றே தமாகா நிர்வாகி கைது - மாநில இளைஞரணித் தலைவர் குற்றச்சாட்டு - tamilnadu latest news

திருவள்ளூர்: கஞ்சா வழக்கில் வேண்டுமென்றே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியை காவல் துறையினர் கைதுசெய்துள்ளதாக மாநில இளைஞரணித் தலைவர் குற்றஞ்சாட்டினார்.

தமாகா கட்சி மாநில இளைஞரணி தலைவர்
தமாகா கட்சி மாநில இளைஞரணி தலைவர்

By

Published : Feb 6, 2021, 12:24 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மத்திய கிளைச் சிறையில் கஞ்சா வழக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காவல் துறையினர் வேண்டுமென்றே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி சங்கர் மீது பொய் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இது குறித்து காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

சட்டப்பேரவை 110 விதியின்கீழ் விவசாய கடன்களைத் தள்ளுபடிசெய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கடன் தள்ளுபடி அறிவிப்பின் மூலம், 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் கூறியதை மட்டுமின்றி கூறாததையும் தங்கள் கூட்டணி நிறைவேற்றிவருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றிபெற்றது" என்றார்.

இதையும் படிங்க: மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் காரை முற்றுகையிட்ட தமாகாவினர்!

ABOUT THE AUTHOR

...view details