திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகேயுள்ள காட்டூரில் தொழிற்பேட்டை உள்ளது. இங்குள்ள கம்பெனி ஒன்றில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நயான் (வயது 20) என்பவர் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். டிச.09ஆம் தேதி இரவு நயான் கம்பெனியில் இருந்து இரவு உணவு சாப்பிடுவதற்கு காட்டூர் தொழிற்பேட்டை வழியாக நடந்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில், ஒருவர் நயான் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தார். பின்னர், அவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் செல்போனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் நயான் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் ஆய்வாளார் நடராஜ் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு செல்போன் பறித்த மூவரையும் தேடி வந்தனர்.