திருவள்ளூர்:செல்போன் பிரச்னைக்காக தலையில் கல்லைப்போட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தைச்சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவர் பூந்தமல்லி அடுத்த குண்டுமேடு பகுதியில், தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில், நேற்று (அக்.4) சந்தோஷ் குமார் அப்பகுதியைச்சேர்ந்த அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாகத்தெரிகிறது.
அப்போது அவருக்கும் அவரது நண்பர் கௌதம் என்பவருக்கும் இடையே நடந்த மோதலில் கௌதமின் செல்போனை சந்தோஷ்குமார் பறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது செல்போனை சந்தோஷ்குமாரிடம் கேட்டுச்சென்ற கௌதமின் தாயாரை அவர், அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதை அறிந்து ஆத்திரமடைந்த கௌதம், அவரின் சகோதரர் கருப்பு முத்து, நண்பர் வெள்ளை முத்து ஆகியோருடன் சேர்ந்து கௌதமிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து, ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.