தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் அடாவடி

திருத்தணி அருகே மாமண்டூர் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையில் அரசு ஊழியர் அல்லாத தனி நபர் உதவியுடன் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருத்தணி டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் அடாவடி
திருத்தணி டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் அடாவடி

By

Published : Jun 16, 2021, 7:47 PM IST

Updated : Jun 16, 2021, 8:33 PM IST

திருவள்ளூர்: கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 30 நாள்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டாஸ்மாக் கடைகளில் அரசின் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில், டாஸ்மாக் ஊழியர்கள் மெத்தனமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாமண்டூர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அரசு ஊழியர் அல்லாத தனி நபரை கடைக்குள் அனுமதித்து மது விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர் சட்டை அணியாமல் கடையில் அமர்ந்துக் கொண்டு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூபாய் 10 முதல் 20 வரை மது விற்பனை செய்வதாக மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர், இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

திருத்தணி டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் அடாவடி

இதையும் படிங்க:யூ-டியூபர் மதனின் மனைவி கைது!

Last Updated : Jun 16, 2021, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details