திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் எண்ணூர் முகத்துவாரம், அத்திப்பட்டு, புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சிறப்பு மத்திய குழு இன்று (டிச. 06) ஆய்வு மேற்கொண்டனர்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சிறப்பு மத்திய குழு ஆய்வு
திருவள்ளூர்: பொன்னேரி பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சிறப்பு மத்திய குழுவினர் ஆய்வுசெய்தனர்.
Nivar cyclone
குழு உறுப்பினர்கள் ஹர்ஷா, ஓபி. சுமன், அமித் குமார், தரம்வீர் ஜா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த நிலையில், முதன்மைச் செயலர் (பொதுப்பணித் துறை) மணிவாசன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர்.
உடன் பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை சென்னை மண்டலம் அசோகன், பாலாறு வடிநில கோட்டம் கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.