திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் கரோனாவின் தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு 150ஆவது நாளாக காவலர் கார்த்திக் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பட்டியலின மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அன்னதானம் - பட்டியிலன மக்கள்
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Sp aravindan
இந்த நிகழ்ச்சியில் ஃபாத்திமா அலி ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் உமன் பிரசிடெண்ட், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன், பெரியபாளையம் ஆய்வாளர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்து 150ஆவது நாளாக நலிவடைந்த மக்களுக்கு காவலர் கார்த்திக் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.