தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழக்கறிஞர் மீது பாலியல் குற்றச்சாட்டு - உறவினர்கள் புகார் - விவாகரத்து

திருவள்ளூர்: விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து வழக்கறிஞர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என தெரியவந்துள்ளது.

dfas
fdsa

By

Published : Jul 31, 2021, 10:37 AM IST

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரைச் சேர்ந்தவர் டார்சன். வழக்கறிஞரான இவர் தன்னிடம் விவாகரத்து வாழ்க்கைக்காக வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை தொடர்ந்து ஆபாச வீடியோ எடுத்து அவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம்வரை பணம் பறிப்புதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கறிஞர் டார்சன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டார்சன் தம்பதியின் மகன், மகள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவுடன் புகார் அளித்த பிரியா என்ற பெண்ணும் அவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, ”டார்சனும் பிரியாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஒன்றாக சில காலம் வசித்துவந்தனர். இதனை தட்டிக்கேட்ட அவரது மனைவிக்கும் டார்சனுக்கும் பிரச்னை ஏற்பட்டு டார்சனின் முதல் மனைவி லட்சுமி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், பிரியா டார்சனை அடிக்கடி வீட்டில் வந்து பார்ப்பதையும், தங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

வழக்கறிஞர் மீது பாலியல் குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து பிரியா கடம்பத்தூரில் உள்ள ஒரு சொத்தை தனது பெயரில் மாற்றி எழுதிக் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சொத்தை டார்சன் தர மறுத்ததால் மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என டார்சன் மிரட்டியதாக பொய்யான புகார் கொடுத்துள்ளார்” என்றனர்.

மேலும் இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி பொய்யான புகார் அளித்து சொத்துக்காக நாடகமாடிய பிரியாவை காவல் துறையினர் கைது செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details