திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிக்குட்பட்ட விடதண்டலம் கிராமத்தில் நியாயவிலைக் கடையில் ரேசன் அரிசியை வாங்கி செல்லும் பொதுமக்களிடம் சிலர் பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதன்பின் அந்த அரிசியை வாகனம் மூலம் ஆந்திராவிற்கு கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பேரில் பொன்னேரி வருவாய்த் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். பின்னர் ஒரு டன் அளவிற்கு சிறு சிறு மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்ததை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர்: ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பரிந்துரை செய்யப்பட்ட ரேஷன் அரிசி
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை அரசு நுகர் பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பிவைத்தனர்.