தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல சொந்த செலவில் வேன் வசதி: அசத்தும் ஊராட்சி மன்றத் தலைவர் - Thiruvallur News

திருவள்ளூர்: அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்காக வாகன வசதி செய்து கொடுத்துள்ள ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தராஜை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

School Van Arranged For the Government School Students by Panjayat Union Leader
School Van Arranged For the Government School Students by Panjayat Union Leader

By

Published : Feb 13, 2020, 7:03 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குள்பட்ட தண்டலச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ளது. இங்கு அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக ஆனந்தராஜ் என்பவர் வெற்றிபெற்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தராஜ்
எந்த அரசியல் கட்சியையும் சாராதவரான ஆனந்தராஜ், சிறுவயதில் கல்விக்காக ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்பட்டு படித்துள்ளார். இந்த நிலைக்கு தனது கிராம மக்களையும் கொண்டு வரவேண்டும் என்று தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் தண்டலச்சேரியிலிருந்து 5 கிமீ தூரம் பேருந்தில் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தராஜ் தனது சொந்த செலவில் படிக்கும் பெண் குழந்தைகளின் பயணத்திற்கு என தனியாக வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
தண்டலச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் அசத்தல்

தொடர்ந்து கிராமங்களைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடுதல், புதிய தார் சாலைகளை அமைத்தல் போன்ற கிராமத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆனந்தராஜ் செய்துவருவது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:தள்ளாத வயதிலும் ஊராட்சி மன்றத் தலைவராக வென்று காட்டிய வீரம்மாள்!

ABOUT THE AUTHOR

...view details