திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பிரபு - கலைச்செல்வி தம்பதியரின் மகன் பி.ஹரிஷ்கண்ணா(10). அந்த பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகாசனப் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்தச் சூழலில் இவர், நின்றபடி பின் நோக்கி வளைந்து, கால் பாதங்களை கைகளால் பிடிக்கக்கூடிய ’சக்கர பந்தாசனம்’ எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 30 முறை செய்து உலக சாதனைப் படைத்துள்ளார்.