தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது! - school girl committed suicide

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் மூன்று பெண்கள் - இலங்கையில் ஒரு பெண் உள்பட 3 பேரிடம் முகநூலில் பழகி ஏமாற்றிய மோசடி பேர்வழி திருத்தணி இளைஞனை காவல் துறையினர் கைது செய்தனர்.

காதலின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!
காதலின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!

By

Published : Nov 25, 2020, 12:47 PM IST

Updated : Nov 25, 2020, 1:15 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவி காதல் முறிவினால் மனமுடைந்து தற்கொலையால் உயிரிழந்தார். திருத்தணி பகுதியில் உள்ள ஒரு அரசு பெண்கள் பள்ளியில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு, ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள அவரது பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மகள் ஆன்லைனில் கல்வி பயின்று வருகிறார் என நம்பிய அப்பெற்றோர், மகளைக் கண்காணிக்கவில்லை. அதன் பின்னர், மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருந்து, மாத்திரைகள் கொடுத்ததும் மகள் புத்துணர்வு பெறுவாள் என்ற நம்பிக்கையில் இயல்பாக இருந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தங்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் பயிரிட அந்தச் சிறுமியின் பெற்றோர் சென்றனர். வீட்டில் தனியாக இருந்த 16 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமி தற்கொலையால் உயிரிழந்தார்.

தோட்டத்திலிருந்து வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், மகள் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குடும்ப கௌரவம் காரணமாக அதனை மூடி மறைத்து இயற்கை மரணம் போல சித்தரித்து மகளுக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

அதன் பின்னர் மகளின் உடமைகளை ஆராய்ந்தபோது சிறுமியின் தாய், மகள் பயன்படுத்திய செல்ஃபோனில் சில வாய்ஸ் மெசேஜ், வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து சிறுமி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர்களுக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல் துறையில் அவர்கள் புகாரளித்தனர். இருப்பினும், மகளின் தற்கொலையை மூடி மறைத்ததிற்காக முதல் வழக்கு பெற்றோர் மீது திரும்பியது. சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் பிணை பெற்று வெளியே வந்த சிறுமியின் தந்தை தனது மகள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் அவர் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

அதன்படி, சிறுமியும், 15 வயதுடைய சிறுவன் ஒருவனும் காதலித்து வந்துள்ளனர். அவருக்கு தீரன் (24) என்ற நண்பர்தான் சிறுமிக்கு மெசேஜ் அனுப்ப சிறுவனுக்கு உதவியிருக்கிறார். நாளைடைவில் தீரன் அந்த சிறுவன் குறித்து சிறுமியிடம் அவதூறு பரப்பி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

மேலும் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் பணத்தையும் பறித்துள்ளார். அதுமட்டுமின்றி ’என்னை நீ உண்மையாக காதலிக்கிறாய் என்றால், கையை வெட்டி புகைப்படம் அனுப்பு’ எனவும் தீரன் கூறியுள்ளார்.

இந்த வன்முறையான காதலை சிறுமியும் மறுதலிக்காமல் செய்திருக்கிறார். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர்.

இச்சூழலில் அந்த சிறுமிக்கு இலங்கையை சேர்ந்த காதலன் தீரனின் முன்னாள் காதலி சில மெசேஜ்களையும், வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். அதில், தீரன் நல்லவர் இல்லை. முகநூல் மூலம் பழகி தன்னையும் காதலிப்பதாக ஏமாற்றி நகை, பணம் என 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துவிட்டார் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அச்சிறுமி இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் அனுப்பிய வீடியோவை தீரனுக்கு அனுப்பி அதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு, என்னால் இதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது, இப்படி என் மேல் சந்தேகப்பட்டால் பிரிந்துவிடலாம் என தீரன் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அச்சிறுமி தற்கொலை செய்துகொண்டார். சிறுமியின் உயிரிழப்பிற்கு தான்தான் காரணம் என்பதால் தீரன் தலைமறைவாகிவிட்டார். மேலும், சிறுமியின் செல்ஃபோனை ஆய்வு செய்த காவல் துறையினர் இலங்கை பெண் குறித்து அறிந்துகொண்டனர். தொடர்ந்து, இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அலுவலர் அந்நாட்டு காவல் துறை உதவியுடன் அப்பெண்ணிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

காதலின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!

இதற்கிடையே, தீரனின் செல்ஃபோன் சிக்னல் மூலம் அவர் தனது சொந்த ஊருக்கு வந்திருப்பதை அறிந்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். இதனையடுத்து இலங்கை பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது பெண் வன்கொடுமை, போக்சோ ஆகிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருடுபோன 400 சவரன் நகையில் 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது

Last Updated : Nov 25, 2020, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details