திருவள்ளூர்:தமிழ்நாட்டில் நிதிநிலை சரியானதும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதா அல்லது டேப் வழங்குவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் குப்பம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச் 10) "மாபெரும் தமிழ் கனவு" விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாட்டில் நிதி நிலை சரியானதும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதா அல்லது டேப் வழங்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். மாபெரும் தமிழ் கனவு திட்டம், இந்த மாதம் இறுதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் திட்டம் இதுவாகும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு வாழ்க்கையின் இலக்கை தேர்வுநிர்ணயிக்கும் என்பதால் +2 மாணவர்கள், மகிழ்ச்சியோடு தேர்வு எழுதுங்கள். விடிய விடிய படித்து உடல் நலத்தை கெடுத்து கொள்ளாமல், தேர்வறையில் உறங்காமல் தைரியமாக தேர்வு எழுதுங்கள். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி வரும்