தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலனுடன் சென்ற இளம்பெண்: சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் பெற்றோர் உயிரிழப்பு! - Thiruthani Government Hospital

திருவள்ளூர்: திருத்தணி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இளம்பெண்ணின் பெற்றோர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளனர்.

திருத்தணி அரசு மருத்துவமனை
திருத்தணி அரசு மருத்துவமனை

By

Published : Aug 10, 2020, 7:12 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோர குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஏழுமலை, பாக்கியம். இவர்களது மகள் ரோஸி (25). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ரோஸிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். ஆனால், திருமணம் நடந்த சில நாளிலேயே ரோஸி கணவரிடம் விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரோஸி சகோதரர் உறவு முறை கொண்ட வாலிபரை காதலித்துள்ளார். மேலும் அவருடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று (09.08.20) இரவு ரோஸியின் பெற்றோர் வீட்டின் தனி அறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காதலனுடன் செல்ல எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை, மகளே காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த மனைவி, தலைமறைவான கணவர்!

ABOUT THE AUTHOR

...view details