பாரதப் பிரதமரின் கிசான் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறாயிரத்து 500 பேர் இரண்டு கோடியே 15 லட்சம் ரூபாய் முறைகேடாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய், காவல் மற்றும் வேளாண்மைத் துறை இணைந்து எடுத்துள்ள நடவடிக்கைகளில், ”இதுவரை இரண்டாயிரத்து 500 பேரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பணத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துசாமி தெரிவித்துள்ளார் .