தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுக்குமாடிக் குடியிருப்பில் பூட்டிய வீட்டில் கொள்ளை! - அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்க நகைகள், ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

robbery
robbery

By

Published : Feb 1, 2021, 1:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் ஆறுமுகம் (33). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார்.

இவர் சில நாள்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது மனைவியுடன் சென்றுள்ளார். பின் அங்கு சில நாள்கள் தங்கியிருந்தபின் நேற்று (ஜனவரி 31) வீடு திரும்பியுள்ளார்.

பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளே சென்ற ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் அலமாரியில் இருந்த துணி, புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. பின் அலமாரியில் இருந்த 8 சவரன் நகை, வெள்ளி நகை, ரூ. 10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

உடனே இது குறித்து ஆறுமுகம் கும்மிடிப்பூண்டி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். இந்தத் தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details