தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளையடித்த 4 வீடுகளின் கதவில் பட்டா கத்தி - Tiruvallur Crime News

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் பட்டா கத்தி சொருகி வைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

theft
theft

By

Published : Oct 23, 2020, 11:09 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி ஊராட்சியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததால் கதவில் பட்டா கத்தியை சொருகி வைத்துவிட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.

அதேபோல, அருகில் இருக்கும் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். பள்ளி வளாகத்திலேயே மது அருந்திவிட்டு இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற இடங்களில் விசாரணை செய்துவருகின்றனர்.

கொள்ளையடிக்க வந்த இடத்தில், வீட்டின் கதவில் பட்டா கத்தி சொருகி வைத்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details