தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் - திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம்

திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

road-safety
road-safety

By

Published : Apr 30, 2022, 10:11 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், பாண்டூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்தும், விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்தும் காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தென்காசியில் ஒரு சச்சின்... 6 வயது சிறுவனின் மிகப்பெரிய கனவு...

ABOUT THE AUTHOR

...view details