தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணின் கர்ப்ப பையில் 3 கிலோ கட்டி அகற்றம் - Thiruvallur Govt Medical College

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியின பெண்ணுக்கு கர்ப்ப பையில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்துள்ளனர்.

பெண்ணின் கர்ப்பப்பையில் 3 கிலோ கட்டி அகற்றம்
பெண்ணின் கர்ப்பப்பையில் 3 கிலோ கட்டி அகற்றம்

By

Published : Aug 30, 2021, 6:37 PM IST

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் லட்சுமி(35). இவர் கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

மேலும், அவருக்கு மாதவிடாயின்போதும் ரத்தப் போக்கு அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார். இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, மருத்துவர்கள் அவருக்கு உடல் பரிசோதனை செய்து பார்த்தபோது ரத்தக் கட்டியும், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருந்ததும் தெரியவந்தது. பின்னர், மருத்துவக் குழு லட்சுமிக்கு அறுவை சிகிச்சைசெய்ய முடிவு செய்தது.

அதன்பேரில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையின் முதல்வர் அரசி ஸ்ரீவத்சவா தலைமையில் மருத்துவர்கள் வைரமாலா, மணிலட்சுமி ஆகியோர் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, அப்பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து மூன்று கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்தனர்.

இதையும் படிங்க: 'தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!'

ABOUT THE AUTHOR

...view details