சென்னை: கரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக கடந்த நான்கு வாரங்களாக இலக்கு நிர்ணயித்து சிறப்பு தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு வருகின்றன. இதனால் இதுவரை 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
விரைவில் 100 விழுக்காடு தடுப்பூசி
தொடர்ந்து ராதாகிருஷ்ணன் பேசுகையில், “திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு முகாமை ஆய்வு செய்தது மிகவும் திருப்திகரமாக உள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 760 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.