திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்கனவே இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், நோயாளிகளின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, பாரதிய பிரவாசி பரிஷத் அமைப்பின் மூலம் ரூ. 2 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி, ரிப்பன் வெட்டி இனிப்புகள் வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.