தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு

திருவள்ளூர்: கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

pundi-reservoir-in-thiruvallur-district
pundi-reservoir-in-thiruvallur-district

By

Published : Feb 11, 2020, 6:40 PM IST

கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீட்டு திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, வந்துகொண்டிருக்கிறது.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடி, மொத்தக் கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி. நேற்று மாலை நிலவரப்படி அணையில் உள்ள நீர் மட்டம் 30. 32 அடி. அதேபோல் 1,816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறப்பு

இதன் காரணமாக சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரி லிங்க் கால்வாய் மூலம் விநாடிக்கு, 515 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீரானது சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக, புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்த பின்னர், சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து மட்டுமே தண்ணீரானது அனுப்பப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:'பொதுவுடைமைவாதி' சிங்காரவேலரின் 74ஆவது நினைவு தினம் - மாலை அணிவித்து மரியாதை

ABOUT THE AUTHOR

...view details