திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முத்துக் கொண்டாபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அலுவலர்கள் எடுக்கவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பதி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கனகம்மா சத்திரம் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனார்.
தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் மறியல் - water issue
திருவள்ளூர்: திருத்தணி அருகே குடிநீர் பிரச்னைக்காக காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில்
தேசிய நெடுஞ்சாலை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்தது. இது குறித்து , தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.