தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீருக்காக திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சென்னை: ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

PROTEST

By

Published : May 4, 2019, 6:13 AM IST

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு கோலடி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், "கோலடி பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது. குறிப்பாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் திருடப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் பகுதிக்கு மட்டும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காமல் இருந்து வருகிறது. உடனடியாக குடிநீர் வழங்கவில்லை எனில் கோலடியில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறு மற்றும் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள குழாய்களை உடைத்து எரிவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதனிடையே முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details