கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10 மாதங்களாக நடத்தப்படாமல் இருந்த மக்கள் குறைதீர் கூட்டம், பிப். 1ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்: முதியோருக்கு உடனடியாக தீர்வு - மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
திருவள்ளூர்: பிப்.1ஆம் தேதி நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்த முதியோருக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
இக்கூட்டத்தில், பொதுமக்கள் 211 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த முதியோருக்கு ஒரே வாரத்தில் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.
இதையும் படிங்க: உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்டதால் முதியவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்!