தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடுகாட்டுப்பாதையை முறைப்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை! - இடுகாட்டுப்பாதை

திருவள்ளூர்: திருத்தணி அருகே இடுகாட்டுப்பாதையை முறைப்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

cemetery
cemetery

By

Published : Nov 16, 2021, 4:25 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த செருக்கனூர் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கான இடுகாட்டுப்பாதை முறையாக இல்லை.

இந்த பாதையை சரிசெய்து கொடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அந்தக் கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக உடலைக் கொண்டு செல்லும் ஒத்தையடிப்பாதை மழை நீரால் சூழ்ந்து காணப்பட்டது.

இடுகாட்டுப்பாதையை முறைப்படுத்தி தரக் கோரிக்கை

மேலும் அந்த நீரில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் துர்நாற்றம் வீசியது. இதற்கிடையில் இறந்தவரின் உறவினர்கள் அவரின் உடலை இடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்தனர்.

உடனடியாக இடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து எத்தனை முறை புகார் செய்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அதை கண்டுகொள்ளவில்லையென மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: பயமா? எனக்கா? தனியாளாக சடலங்களை தகனம் செய்யும் இஸ்லாமிய பெண்!

ABOUT THE AUTHOR

...view details