திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆர்.கே. பேட்டை ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கு நாளை (அக்.22) தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் உள்பட 16 உறுப்பினர்களில் திமுக, அதிமுகவிற்குத் தலா 8 உறுப்பினர்கள் வீதம் பலம் சமமாக உள்ளது.
தேர்தல் தொடர்பாக ஒன்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும் தேர்தல் தொடர்பான விவரங்கள் அடங்கிய தபால் வழங்கப்பட்டது.
இருப்பினும், அதிமுகவிற்கு காலதாமதமாக தேர்தல் தொடர்பான விவரங்கள் அடங்கிய தபால் வழங்குவதாகவும், முன்தேதியிட்டு தபால் வழங்கியதுபோல் கையொப்பம் கேட்பதால், தபால் வாங்க மறுத்துவிட்டதாகவும் அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
துணைத்தலைவர் பதவிக்கு நாளை (அக்.22) தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் காலதாமதமாக தபால் வாங்க மறுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருத்தணி முருகனுக்கு பட்டு வஸ்திரங்கள்