சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மில்வின்ராஜ்(39). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சக ஊழியரும், டெல்லியை சேர்ந்தவருமான கீதுசிங்(33) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே, திருமணம் செய்த முடிவெடுத்து காதலர்கள் போரூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தோணி மில்வின்ராஜ் கோபித்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
கீதுசிங்கின் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை பின்னர், இரவு வீடு திரும்பிய அவர் நீண்ட நேரம் அழைத்தும் கீதுசிங் வராததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு, கீதுசிங் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்ட அந்தோணி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போரூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த கீதுசிங்கின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்தோணி மில்வின்ராஜும், கீதுசிங்கும் தங்களது துணைவர்களைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கீதுசிங் தூக்கிட்டு தற்கொலை கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.