சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை போக்க திருவள்ளூர் மாவட்டம் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து பூண்டி ஏரிக்கு 8 முதல் 12 டிஎம்சி அளவு தண்ணீர் பெற்று இங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை வறண்டு கிடந்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்களுக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதிநீர், கண்டலேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பூண்டி ஏரியை வந்தடைந்தது.
தற்போது ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கங்கை கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்தானது இன்று (அக்.29) காலை நிலவரப்படி வினாடிக்கு 845 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது.