நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதையடுத்து தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ரஜினி ரசிகர்கள் ஒன்றிய செயலாளர் கோபிநாத் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் மேலும் ஆன்மிக அரசியல் தலைவர் என்றும் வருங்கால முதலமைச்சர் ரஜினிகாந்த் என ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். அதேசமயம் பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக பேருந்தை நிறுத்திய டிரைவருக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்து, வரும் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்குமாறு பரப்புரையைத் தொடங்கினார்கள்.
இதையும் படிங்க: ரஜினி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தல் பதில் சொல்லும் - எம்பி கனிமொழி