தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமாகி 11 நாட்கள் - இளம்பெண் தற்கொலை - suicide case

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே திருமணமான 11 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

By

Published : Feb 28, 2020, 11:00 AM IST

பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேரடிமுத்து(31). அதே பகுதியில் காயளான் கடை நடத்திவருகிறார். இவருக்கு கடந்த 14ஆம் தேதி சரஸ்வதி(21), என்ற பெண்ணுடன் திருச்செந்தூரில் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தேரடிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது சரஸ்வதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காவல் துறை காவல் துறையில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி கமிஷனர் செம்பேடுபாபு இறந்து கிடந்த சரஸ்வதி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆனதாகவும் திருமணத்திற்கு முன்பு சரஸ்வதியுடன் ஒரு நபர் பழகி வந்ததாகவும் சரஸ்வதிக்கு திருமணமானதை அறிந்துகொண்டு அந்த நபர் செல்போனில் தொடர்பு கொண்டு சரவஸ்வதையை மிரட்டியதாக தெரியவந்தது. மேலும் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை இண்டர்நெட்டில் விட்டு விடுவேன் என அவர் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details