தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - Police

திருவள்ளூர்: சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

By

Published : Jul 20, 2019, 10:13 PM IST

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு காரினை அதன் ஓட்டுநர் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் காரை சோதனை மேற்கொண்டபோது, காரில் சுமார் ரூ 10 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் எடை கொண்ட 33 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சொகுசு காரினைக் கைப்பற்றி அதிலிருந்த ரூ 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கும், ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி வனத்துறையினர் சொகுசு காரில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை விட்டு தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details