திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 778 கைப்பேசிகள் திருடு மற்றும் காணாமல் போனதாகக் காவல்நிலையங்களில் புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. புகாரைத் தொடர்ந்து மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிலர் உரிய ஆவணங்களின்றி செல்ஃபோன்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 174 செல்ஃபோன்களை சைபர் கிரைம் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இதன் மூலம் பல்வேறு காவல்நிலைங்களில் பதிவான 17 செல்ஃபோன் திருட்டு வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 174 கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.