திருவள்ளூர்: திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பெண் காவலர் ரோஜாவிற்கும், ராஜ்குமார் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (டிச.30) பெண் காவலர் ரோஜாவின் சொந்த மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து, அவர் தாயார் திருவள்ளூருக்கு வந்துள்ளார்.
அப்போது, ரோஜா தனது இரண்டு குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியவில்லை என தாயாருடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று (டிச.30) இரவு சுமார் 8 மணி அளவில் பெண் காவலர் ரோஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பெண் காவலர் ரோஜாவின் கணவர் ராஜ்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் - help@snehaindia.org மற்றும் சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க:சென்னையில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வெட்டி படுகொலை.. சினிமா போன்று வாக்குமூலம் அளிப்பு!