திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நாரட்மால் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பெண்கள் மூவர் கடையில் இருந்து சேலைகளை திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.
ஜவுளிக் கடையில் சேலை திருடிய 4 பேர் கைது இது குறித்து கடை உரிமையாளர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதில் சென்னை காக்காதோப்பு பகுதியை சேர்ந்த தேன்மொழி, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வரலட்சுமி, ஜெனிபர், சுரேஷ் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் ஜவுளிக்கடையில் இருந்து திருடிச் சென்ற சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புடவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:போதையில் இருந்த நண்பரை பெட்ரோல் ஊற்றி எரித்த ஆசாமிகள்!