பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் தலைமையில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு உள் இடஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நடந்த சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பிப்ரவரி 28ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.