சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 1) நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் பொன்னையா அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 3,622 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கூடுதலாக 1,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தேர்தல் விதிமீறல் குறித்த புகாரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.