திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.12.50 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நாராயணன், விவசாயிகள் ஆகியோர் நேதாஜி சாலையில் இருந்து மீரா திரையரங்கம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில், "2019-20ஆம் ஆண்டுக்கான கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.12.50 கோடி உடனடியாக வழங்க வேண்டும்.
2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான பாக்கி தொகையை வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் பணியை ஆலை நிர்வாகம் ஏற்றிட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை