திருவள்ளூர் மாவட்டம், நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மழை நீரை அப்புறப்படுத்தும் பணி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
மூன்று நாளாக குடிநீர் இன்றித் தவிக்கும் மக்கள்! - water resourse
திருவள்ளூர்: குடிநீரின்றித் தொடர்ந்து மூன்று நாட்களாகத் தவித்து, வரும் கிராம மக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மூன்று நாளாக தண்ணிர் இன்றி தவிக்கும் மக்கள்!
அப்போது, பூமிக்கு அடியில் தண்ணீர் குழாய் உடைப்பட்டது. இதன்காரணமாக அப்பகுதிக்கான தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்டது.
இதனால், தடப்பெரும்பாக்கம் - அம்பேத்கர் நகர்ப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக குடிநீர் இன்றி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சீர் செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பாபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.