திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை! - sudden rain
திருவள்ளூர் : திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த காற்றுடன் மழை
கோடைக்காலம் தொடங்கியது முதல் அக்னி நட்சத்திரம் முடியும் வரை திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஒரு மணி நேரமாக இடைவிடாது பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.