திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. சமீபகாலமாக இங்கு ஊழியர்கள் சரியாகப் பணிக்கு வருவதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குப் பல்வேறு பிரச்னைகளுக்காக பொதுமக்கள் இன்று (அக்.18) மனு அளிக்க வந்தனர். இங்கும் ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.