தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல் காரணமாக நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைப்பு - corona spread

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ முகாம்களை அதிகப்படுத்தவும், பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கரோனா பரவல் காரணமாக நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைப்பு
கரோனா பரவல் காரணமாக நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைப்பு

By

Published : Apr 13, 2021, 4:47 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,579 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள், பரிசோதனைகள் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

அதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 150 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 42 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 3500 முதல் 4000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு நடமாடும் வாகனம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details